அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா மீது சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சசிகலா மற்றும் அவரது உறவினர்களான இளவரசி, சுதாகர் ஆகியோர் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை சாலையில் தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.
இருப்பினும் சசிகலா வருகையால் அதிமுகவில் பல மாற்றங்கள் வரும் என எதிர்ப்பார்த்ததை போல தற்போது முதலே மற்றங்கள் வர துவங்கியுள்ளது. ஆம், நேற்று சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, தங்கமணி, வைத்தியலிங்கம், கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் திடீர் ஆலோசனையில் ஈடுப்பட்டனர்.
சுமார் 4 மணி நேரம் நீடித்த அந்த ஆலோசனை கூட்டத்தில், அதிமுகவில் கட்சி நிர்வாக ரீதியாக மாவட்டங்களைப் பிரிப்பது, புதிய மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை நியமிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.