சர்ச்சை நாயகியான கங்கனா ரனாவத்தின் சமீபத்தைய படங்கள் எதுவும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இதனால் சமீபத்தைய ஆண்டுகளில் பாலிவுட்டைத் தவிர்த்து கங்கனா தென்னிந்திய சினிமாவிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார். தலைவி படம் மூலம் தமிழில் ரி எண்ட்ரி கொடுத்த அவர், சந்திரமுகி 2 படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே பெரியளவில் வெற்றியைப் பெறவில்லை.
அதையடுத்து கடந்த ஆண்டு இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் அவர் மாதவனோடு இணைந்து ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தை தயாரிப்பாளர் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் சில நாட்கள் நடந்த நிலையில் நிறுத்தி கங்கனா நாடாளுமன்றத் தேர்தலில் பங்கேற்றதன் காரணமாக ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டது.