ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்- முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

செவ்வாய், 12 அக்டோபர் 2021 (19:19 IST)
கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் கொரொனா தொற்று பரவிய நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முதல் அலை முடிந்து இரண்டாவது கொரொனா அலை வேகமாகப் பரவி வரும் நிலையில் மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன.

தற்போது நாளொன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ள நிலையில் கொரொனா கட்டுப்பாடுகளில் மேலும் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின்  நாளை நிபுணர்கள், மருத்துவ குழுவினர், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகிறது.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்