இதனால் கோபமான நடிகை த்ரிஷா அதற்கு தனது கடுமையான கண்டனங்களை தெரிவித்தார். தான் பீட்டாவுக்கு ஆதரவு தெரிவித்தாலும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக எங்கும் பேசவில்லை என விளக்கம் அளித்தார். அதன் பின்னர் நான் ஒரு தமிழன். நான் பீட்டாவை ஆதரிக்கிறேன். எவ்வளவு பழமையான பாரம்பரியமாக இருந்தாலும் மிருகங்கள் வதைக்கப்படுவதை நியாயப்படுத்த முடியாது என த்ரிஷா மற்றொரு டுவீட் செய்திருந்தார்.