நடிகை ஷகிலா பிரபல அரசியல் கட்சியில் இணைந்தார்

வியாழன், 25 மார்ச் 2021 (23:25 IST)
நடிகை ஷகிலா இன்று தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைகள் துறையில் இணைந்தார் .

தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , விசிக பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டன.

இந்நிலையில் சமீப காலமாக நடிகர் நடிகைகள் அரசியல் கட்சிகளில் இணைந்துவரும் நிலையில், இன்று தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைகள் துறையில் இணைந்தார் நடிகை ஷகிலா.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை மலையாள சினிமாவில் அவர் கவர்ச்சி வேடத்தில் நடித்த படங்கள் சூப்பர் டூப்பட் ஜிட் அடித்தன. தற்போது தமிழ், மலையாளம் உள்ளிட்ட சினிமாக்களின் துணைவேடங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.  அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்