தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவாக விஜயகாந்த் வாக்கு சேகரிப்பு

வியாழன், 25 மார்ச் 2021 (21:07 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , விசிக பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டன,

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவாக உள்ள நிலையிலும் தனது கட்சியினருக்காகவும் தனது தொண்டர்களுக்காகவும் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதிமுகவிலிருந்து விலகி அமமுக கூட்டணியில் 60 தொகுதிகளில் போட்டியிடவுள்ள தேமுதிகவுக்கு விஜய்காந்த்தின் பிரசாரம் கைகொடுக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று சென்னை எழும்பூர்  தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரபுவை ஆதரித்து விஜயகாந்த் வாக்கு சேகரித்தார். சேத்துப்பாக்கத்தில் வாகனத்தில் அமர்ந்து கையை மட்டும் தூக்கி வாக்குகள் சேகரித்தார். மேலும் இதேபோல் திருவிக தொகுதி வேட்பாளர் எம்பி சேகர், வில்லிவாக்கம் தொகுதி தேமுதிக வேட்பாளர் சுபமங்கலம் டில்லிபா ஆகியோருக்கு ஆதரவாக விஜயகாந்த் வாக்குகள் சேகரித்தார். இத்னால் கட்சித் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்