அமமுக வேட்பாளர் குருவுக்கு கொரோனா வைரஸ்!

வியாழன், 25 மார்ச் 2021 (20:21 IST)
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் தமிழகத்தில் இன்று ஆயிரத்து 700க்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிந்ததே
 
தேர்தல் நேரம் என்பதால் வேட்பாளர்கள் பிரசாரம், பொதுக்கூட்டம் ஆகியவை காரணமாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
குறிப்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் இரண்டு பேருக்கும் தேமுதிக வேட்பாளர்கள் இரண்டு பேருக்கும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவருக்கு கொரோனா பாதித்துள்ள தகவல் வெளிவந்துள்ளது
 
திருவள்ளூரில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் குரு, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் இதனை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்