பளிச்சுனு எரிஞ்சா அது பல்பு - பளபளனு இருந்தா அது குஷ்பு

Webdunia
ஞாயிறு, 29 மே 2016 (18:12 IST)
நடிகை குஷ்பு சினிமா துறைக்கு வந்து பல ஆண்டுகல் ஆனாலும் அவர் மீது ரசிகர்கள் வைத்துள்ள அன்பு இந்த நிமிடம் வரை மாறாமல் உள்ளது.
 

 
நடிகை குஷ்பு வருசம் 16 படம் மூலம் அறிமுகம் ஆகி பல்வேறு மொழிகளில் சாதனை படைத்துள்ளார். வயது மற்றும் பல்வேறு காரணங்களால் கதாநாயகி வேடத்தை ஓரம் கட்டிவைத்துவிட்டு, மற்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும், தொலைக்காட்சி தொடர் மற்றும் பல்வேறு தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
 
இதனிடையே திமுகவில் இணைந்தார். பின்பு அதிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அங்கு அவருக்கு 
அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டது.
 
இந்த நிலையிலும், நடிகை குஷ்புவை பாராட்டி, திஸ் இஸ் திரு என்ற ரசிகர் ஒருவர் டிவிட்டரில் கவிதை ஒன்றை வடித்துள்ளார். இதில், ‘பளிச்சுனு எரிஞ்சா அது பல்பு......பளபளனு இருந்தா அது குஷ்பு' என குஷ்புவை உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
 
இந்தக் கவிதையை ரசித்த நடிகை குஷ்பு, அதை தனது டுவிட்டரில் வெளிட்டுள்ளார்.  
 
அடுத்த கட்டுரையில்