கு** கழுவ நீர் இல்ல, ஆனா நீங்க... சீமான் தம்பிகளை புகழ்ந்து தள்ளிய கஸ்தூரி!

Webdunia
புதன், 12 ஜூன் 2019 (15:42 IST)
நாம் தமிழர் கட்சியினரின் சமூக சேவையை பாராட்டி நடிகை கஸ்தூரி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். 
 
அந்த பதிவில் கஸ்தூரி குறிப்பிட்டிருப்பது பின்வருமாறு, தமிழகத்தை பொறுத்தவரை, கடந்த 50 ஆண்டுகளுக்குள் பிறந்தவர்களுக்கு அரசியல் என்றாலே ஒரு நல்ல பிசினஸ் என்றுதான் தெரியும். 
 
பொது சொத்தை ஆட்டையை போட்டும், பொதுமக்களை ஓட்டுப் போடும் ஆட்டுமந்தையாக பாவிக்கும் தலைவர்களையே பார்த்து பழகிய நமக்கு நாம் தமிழரின் தடாலடி சமூக சேவையெல்லாம் இன்ப அதிர்ச்சியாகதான் உள்ளது.
குண்டி கழுவ நீர் இல்லாமல் தமிழன் தவித்துக்கொண்டிருக்க, குந்திய இடத்தில் இந்தியை வைத்து நம்மை திசை திருப்புவோர் மத்தியில் சீமானின் தம்பிகள் வேளச்சேரியில் நீர்நிலைகளை தூர் வாருகிறார்கள்! மரம் நடுகிறார்கள், ஆண் பெண் சாதி மதம் கடந்து இணைந்து பார்க்காமல் குப்பை அள்ளுகிறார்கள் சாக்கடை அடைப்பை சுத்தம் செய்கிறார்கள்...
 
ஏரி என்று ஒன்று இருந்தால் அதை என்ன செய்ய வேண்டும்? முதலில் திருட்டுத்தனமாக தண்ணீரை விற்க வேண்டும். பிறகு ஏரி மணலை விற்க வேண்டும். அப்புறம் குப்பையால் நிரப்பி ஏரியை காணாமலடிக்க வேண்டும். பிறகு அதை வளைத்து ஏரி இருந்த இடத்தில் மருத்துவ கல்லூரி மல்டிப்ளெஸ் மாடிவீடு என்று கட்டிக்கொள்ள வேண்டும். இதுதானே காலம் காலமாக நடக்கிறது? 
 
இப்போது திடீரென்று ஒரு அரசியல் அமைப்பு மக்கள் பணியில் இறங்கினால் எப்படி சமாளிப்பது? நாம் தமிழர் தொண்டர்களை நான் கேட்கிறேன், யாரை கேட்டு இப்படி களத்தில் இறங்கினீர்கள்? அப்புறம் மக்கள் எல்லா அரசியவாதிகளிடமும் சமூக பொறுப்பு, சுற்றுசூழல் விழிப்புணர்வு, தொலைநோக்கு பார்வை எல்லாம் எதிர்பார்க்க மாட்டார்களா? 20 ஆண்டுகளாக இந்த ஏரியை காட்டி காண்ட்ராக்ட் விட்டு கமிஷன் பார்த்துக்கொண்டிருக்கும் அதிகாரிகள் நிலைமையை எண்ணி பார்த்தீர்களா?
மக்கள் நீதி மைய்யத்தின் சமூக செயல்பாடுகளில் ரத்ததானத்துக்கு மிக முக்கிய இடமுண்டு. அதே போல நாம் தமிழர் கட்சியினரும் குருதிக் கொடைக்கென ஒரு பாசறையே வைத்து செயல்படுகிறார்கள்.
 
நாம் தமிழர் கட்சியின் குறுகிய இனவாதத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. தமிழ் என்பது இனமல்ல, உணர்வு என்று நினைப்பவள் நான். ஆனால் அந்த கட்சியின் செயல்பாட்டை வியக்காமல் இருக்க முடியவில்லை. தமிழர்கள் மட்டுமா உள்ளனர்? பழமொழி பேசுபவர், பல ஊர் காரர், ஏன், பசு பறவைக்கு கூட நல்லது நடந்துள்ளதே. 
 
பெரிது பெரிதாய் வாய் கிழிய கொள்கை பேசுபவர்கள் என்னத்தை கிழித்தார்கள், தேர்தலுக்கு தேர்தல் கொள்கையை அடகுவைத்து சமரசங்கள் செய்வதை தவிர? மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற கொள்கை மட்டுமே தேவை. அது எங்கு இருப்பினும் வரவேற்கப்பட வேண்டியது என பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்