ரஜினிகாந்தின் குரு சிஷ்யன் திரைப்படத்தின் மூலம் 1988 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் கவுதமி. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்த அவர், 90களில் தவிர்க்க முடியாத தென்னியந்தியா நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர்.
1997 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த கவுதமி, அக்கட்சியின் இளைஞர் அணி துணை தலைவராக பணியாற்றினார். அப்போது ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அடல் பிஹாரி வாஜ்பாய்க்காக கவுதமி செய்த பிரச்சாரங்கள் அதிக கவனம் பெற்றன.
கடந்த அக்டோபர் மாதம் பாஜகவில் இருந்து விலகுவதாக நடிகை கௌதமி அறிவித்தார். 25 ஆண்டுகளாக கட்சிக்கு உறுதியான விசுவாசமாக இருந்தும், தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று நடிகை கௌதமி குற்றம் சாட்டி இருந்தார்.