26 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்-ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் அறிவிப்பு

Sinoj

புதன், 14 பிப்ரவரி 2024 (08:08 IST)
26 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
 
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று இடை  நிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் அறிவித்திருந்த நிலையில், வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் போராட்ட்டம் நடத்தப்படும் என்று  அறித்தது.
 
இதையடுத்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
 
இந்த நிலையில், அரசு  ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என நேற்று  தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்த நிலையில், அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது என்றும், அரசு ஊழியர்களின் வருகை பற்றி மனிதவள மேலாண்மை துறைக்கு காலை 10:15 மணிக்குள் தெரியப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:
 
தமிழ் நாட்டில் விரைவில் நிதி நிலைமை சீரானவுடன் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கும் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்