இந்த நிலையில், முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி சமீபத்தில் நடந்த கார் விபத்தில் காலமான நிலையில் அவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவரான நடிகர் அஜித் சென்னையில் உள்ள வெற்றி வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளதாக தகவல் வெளியானது.
நடிகர் அஜித்குமார் வெற்றி துரைசாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நிலையில், இன்று வெற்றி துரைசாமிக்கு இறுதி மரியாதை செலுத்தச் சென்ற நடிகரும் தமிழக வெற்றிக் கழகக் கட்சித் தலைவருமான விஜய் கூட்ட நெரிசல் காரணமாக அஞ்சலி செலுத்த முடியாமல் திரும்பி சென்றார்.