பாஜகவில் இணைந்த நடிகர் சுப்பு பஞ்சுவை வரவேற்ற நடிகை குஷ்பு அவருடன் இணைந்து எடுத்த செல்பி புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து பாஜகவில் சுப்பு பஞ்சு அவர்களை வரவேற்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். குஷ்பு தயாரிப்பில் சுந்தர் சி இயக்கிய அரண்மனை, கலகலப்பு உள்பட பல திரைப்படங்களில் சுப்பு பஞ்சு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது