பாஜகவில் இணைந்த துப்பாக்கிச்சூடு குற்றவாளி?

புதன், 30 டிசம்பர் 2020 (17:13 IST)
பாஜகவில் இணைந்த துப்பாக்கிச்சூடு குற்றவாளி?
கடந்த சில வருடங்களாகவே பாஜகவில் இணையும் பிரபலங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது போல் குற்றவாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழக பாஜகவில் குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டப்பட்ட சிலர் இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த நிலையில் டெல்லியில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது துப்பாக்கி சூடு நடத்திய ஒருவர் பாஜகவில் இணைந்து உள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு சிஏஏ என்ற மசோதாவை அமல்படுத்தியது. இந்த மசோதாவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது 
 
திமுக உள்பட பல அரசியல் கட்சிகள் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு குரல் கொடுத்தனர் என்பது குறிப்பிடதக்கது. அதுமட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்தன
 
அந்த வகையில் டெல்லியில் ஷாகின் பாக் என்ற பகுதியில் சிஏஏ மசோதாவுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தின்போது துப்பாக்கி சூடு நடத்தியதாக கைது செய்யப்பட்டவர் கபில் குஜ்ஜார். இவர் இன்று திடீரென பாஜகவில் இணைந்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்திய நடத்திய குற்றவாளி என்று கருதப்படும் கபில் குஜ்ஜார் இன்று பாஜகவில் இணைந்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்