நடிகர் சல்மான் கானுக்கு ஆதரவாக இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக் வாய்ஸ் கொடுத்துள்ளார்.
நடிகர் சல்மான் கான் நடித்த சுல்தான் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில், மல்யுத்த காட்சிகளில் நடித்த பொழுது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் போன்று உணர்ந்தேன் என கூறினார். இதற்கு பெண்கள் அமைப்பு பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், அந்த கருத்தை நடிகர் சல்மான் கான் குறுகிய நோக்கத்தில் சொல்லவில்லை என இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக் வாய்ஸ் கொடுத்துள்ளார். இதனால் இந்தி உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.