வெளியூர்ல பிச்சை எடுக்கணும்.. உள்ளூர்ல சாகணும்! – அமெரிக்க வாழ் தமிழர்களிடம் பேசிய ரஜினிகாந்த்!

Prasanth Karthick

புதன், 12 ஜூன் 2024 (18:28 IST)
பிரபல நடிகர் ரஜினிகாந்த சமீபத்தில் அமெரிக்க வாழ் தமிழர்களிடம் பேசியபோது சொன்ன பழமொழியும், கருத்தும் தற்போது வைரலாகியுள்ளது.



தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். சினிமா என்பதை தாண்டி அரசியல் வட்டாரத்திலும் அவருக்கென ஒரு மரியாதை உள்ளது. பிரதமர் மோடி பதவியேற்பு விழா தொடங்கி, சந்திரபாபு நாயுடுவின் பதவி ஏற்பு விழா வரை நடிகர் ரஜினிகாந்திற்கு முன் இருக்கை மரியாதை தரப்படுகிறது.

இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த அமெரிக்காவில் வாழும் தமிழ் மக்களோடு காணொளி மூலமாக உரையாடினார். அப்போது தமிழர்கள் அனைவரும் எங்கு சென்றாலும் திரும்ப தமிழ்நாட்டிற்கு வரவேண்டும் என ஒரு பழமொழியை உதாரணம் காட்டி பேசினார்.

ALSO READ: மோடி.. நாயுடு.. சென்னை திரும்பிய ரஜினிகாந்த் அளித்த ஒரே ஒரு வரி பேட்டி..!

அவர் பேசியபோது “நீங்க எல்லாரும் எங்க போனாலும் எவ்வளவு சம்பாதிக்கணுமோ, சாதிக்கணுமோ அதையெல்லா செஞ்சிட்டு சொந்த ஊருக்கு வாங்க. ஒரு பழமொழி சொல்வாங்க. பிச்சை எடுத்தாலும் உள்ளூர்ல பிச்சை எடுக்க கூடாது, வெளியூர்லதான் பிச்சை எடுக்கணும். அதுபோல செத்தாலும் வெளியூர்ல சாக கூடாது. சொந்த ஊர்லதான் சாகணும். அதுனால நீங்க எங்க போனாலும் உங்க கடைசி காலங்கள்ல உங்க ஊர்களுக்கு போங்க. அங்க பேரன், பேத்திகளோட நேரம் ஒதுக்குங்க. நீங்க வாழ்ந்த அந்த ஊரை சுற்றி பாருங்க. நீங்க ரசிச்ச அந்த அழகான பெண்கள… சாரி.. கிழவிகள மறுபடியும் பாருங்க” என பேசியுள்ளார்.

சொந்த ஊரை விட்டு வெளியே செல்லும் மக்களுக்கு எப்போதும் ஊர் நியாபகம் இருக்கும். அதை எப்போதும் விட்டுவிட கூடாது என நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளது வைரலாகியுள்ளது.

Edit by Prasanth.K
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்