நான் அப்படி பேசவே இல்லை : நடிகர் பிரகாஷ்ராஜ் விளக்கம்

செவ்வாய், 2 ஜனவரி 2018 (11:42 IST)
கர்நாடகத்தில் கன்னடர்களை தவிர மற்றவர்கள் ஆட்சி புரிய வாய்ப்பு வழங்கக்கூடாது என்று நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியதாக வெளியான செய்திக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். 

 
2017ஆம் ஆண்டின் சிறந்த நபர் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய பிரகாஷ்ராஜ் “எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. பெங்களூரில் அமைதியை சீர்குலைக்க முயற்சி செய்பவர்களுக்கு இடம் தரக்கூடாது. கர்நாடகத்தில் கன்னடர்களை தவிர மற்றவர்கள் ஆட்சி புரிய வாய்ப்பு வழங்கக்கூடாது” எனப் பேசியதாக செய்திகள் வெளியானது.
 
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரகாஷ்ராஜ் தமிழக்தில் ஒரு மாதிரியும், கன்னடத்தில் வேறு மாதிரியும் இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் டிவிட்டரில் கருத்து தெரிவித்தனர்.
 
இந்நிலையில், இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்த பிரகாஷ்ராஜ்  “தகுதி வாய்ந்தவர்கள் நாட்டின் எந்த மாநிலத்தையும் ஆளலாம் என்பதே இந்தியனான என் நிலைப்பாடு. எந்த மாநிலமாக இருந்தாலும் பிரித்தாளும் தன்மை கொண்ட வகுப்பு வாத அரசியல்வாதிகளை இனி வரும் தேர்தல்களில் வெற்றி பெற விட மாட்டோம் என்றுதான் பேசினேன். ஆனால், அதை தவறுதலாக திரித்து பேசி வருகின்றனர். இது உங்கள் பயத்தையும், விரக்தி மற்றும் வெறுப்பு உணர்வையும் காட்டுகிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்