குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து காதலியை கற்பழித்த நடிகர்...

வெள்ளி, 29 டிசம்பர் 2017 (15:35 IST)
தன்னுடைய காதலியை கற்பழித்து விட்டு அவரை திருமணம் செய்து கொள்ள தயங்கிய நடிகரை போலீசார் தேடி வருகின்றனர்.


கர்நாடகாவை சேர்ந்த இளம் நடிகர் சுப்ரண்யா. இவர் ‘ஹோம்பன்னா’ என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் பேஸ்புக் மூலம் ஒரு இளம்பெண்ணுடன் நெருங்கி பழகியுள்ளார்.  அதன்பின் அது காதலாக மாறியுள்ளது. இது இருவரின் குடும்பத்திற்கும் தெரிய வர திருமணம் பேச்சுகள் எழுந்தன. ஆனால், தன்னுடைய முதல் படமான ஹோம்பன்னா வெளிவந்த பின்னரே திருமணம் எனக்கூறி சுப்ரமண்யா தட்டிக் கழித்துள்ளார்.
 
அதன் பின்பு படம் வெளியான பின்பும் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. சொந்தமாக ஒரு வீடு கட்டிய பின்பு திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார். 
 
அந்நிலையில், கடந்த நவம்பர் 1ம் தேதி தன்னுடைய காதலியை தன்னுடைய சகோதரி வீட்டில் ஒரு விழா என்று அழைத்து வந்துள்ளார். ஆனால், அங்கு செல்லாமல் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு, அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மயக்கம் தெளிந்த அப்பெண்ணிடம் உன்னை கண்டிப்பாக திருமணம் செய்து கொள்கிறேன் என வாக்குறுதி அளித்துள்ளார்.

 
ஆனாலும், அதற்கு பின் திருமணம் செய்வதை தட்டிக்கழித்துள்ளார். மேலும், வேறு யாரையும் திருமணம் செய்தால் உன் முகத்தில் ஆசிட் வீசிவிடுவேன் என மிரட்டியுள்ளார். அதன்பின், தன்னுடைய அடுத்த படத்திற்கு ரூ.20 லட்சம் பணம் வேண்டும். அதை கொடுத்தால் மட்டுமே உன்னை திருமணம் செய்து கொள்வேன் என மிரட்டியுள்ளார்.
 
இதையடுத்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இது தெரிந்தவுடன் சுப்ரமண்யா தலைமறைவாகி விட்டார். அவர் மீது கற்பழிப்பு, மிரட்டல், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்