இனி நடவாமல் இருக்க எல்லாம் முயல்வோம் : சுவாதி கொலை பற்றி பார்த்திபன் கருத்து

Webdunia
வியாழன், 7 ஜூலை 2016 (15:38 IST)
சமீபத்தில் சென்னையில் படுகொலை செய்யப்பட்ட சுவாதியின் மரணம் பற்றி நடிகர் பார்த்தீபன் தனது முகநூலில் வருத்தம் தெரிவித்துள்ளார். 


 

 
அதில் அவர் குறிப்பிடுள்ளதாவது:
 
நேற்று முன்தினம் இரவு கீர்த்தனாவை மணிரத்னத்தின் (20 நாட்கள்) படப்பிடிப்பிற்கு வழியனுப்பி விட்டு வரும்போதே வருத்தம் என்னோடு ஒட்டிக்கொண்டு வந்தது. இரவெல்லாம் வடிந்ததும் அதிகாலை எங்களின் குறுஞ்செய்திகள் இது!


 

 
சில நாட்களே பிரிவேதனை தரும்போது ,
 
'சுவாதீ'னம் அற்று போகும் பல பெற்றோரின் நிலை 
 
எப்படியிருக்கும்? எப்படி இருக்கும் உயிரோடு?
 
நடை பிணமாக நகர்ந்துக் கொண்டிருக்கும் வாழ்க்கை நரகரணமானது. தினமும் பல துக்க செய்திகள் (ஐந்தறிவை மாடியிலிருந்து வீசும் கீழ்நிலை உட்பட) நம் நகரத்தையே நரகமாக்கி விடுவதால் நம் எல்லோரின் மனமே மயானமாக.
 
ஒப்பாரி பயனில்லை!
 
இனி நடவாமல் இருக்க எல்லாம் முயல்வோம் .
 
கொலைகாரர்களை கண்டுபிடித்து பாராட்டை பெறும் காவல்துறை கானாமல் போகும் குழந்தை திருட்டை கண்டுபிடித்தால் கும்பாபிசேகம் செய்வோமே அத்தொப்பிக்கு.
 
Fb/tweet/ social media பற்றி பல குறைகள் பலர் சொன்னாலும், நல்ல காரியங்கள் பலவற்றிற்கு 
இவைகளின் கைங்கரியமே காரணமாகிறது. நன்றி!
 
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
அடுத்த கட்டுரையில்