பழம்பெரும் நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவருமான கே.என்.காளை(84) மாரடைப்பில் காலமானார்.
சென்னையில் வசித்து வந்த அவர், விஜயகாந்த், சரத்குமார், ராதாரவி ஆகியோர் நடிகர் சங்க நிர்வாகிகளாக இருந்த காலத்தில் அவர்களுடன் பணியாற்றியுள்ளார். கலைமாமணி, மலேசிய நாடகக் காவலர் விருது என பல விருதுகளை பெற்றுள்ளார்.
சமீபத்தில் நடிகர் சசிகுமார் நடித்து வெளியான ‘கிடாடி’ படத்திலும் நடித்துள்ளார். ‘கிடாரி யாருன்னு நினச்ச.. அவன் என் சிஷ்யன்டா’ என்று அவர் அப்படத்தில் பேசிய வசனம் ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஒன்றாகும்.
இவர் தனது வீட்டில் இருந்தபோது, திடீரெனெ ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக இன்று காலமனார்.