இந்த நிலையில், "மிக்ஜாம்" புயல், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவிடும் பணியில் தனிநபர் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள தமிழ்நாடு அரசின் “வாட்ஸ்அப்” எண்கள் (அலுவலர் மற்றும் வாட்ஸ்அப் எண்கள் விவரம் திரு. ஷேக் மன்சூர், உதவி ஆணையர் - 9791149789, திரு. பாபு, உதவி ஆணையர் - 9445461712 ,திரு. சுப்புராஜ், உதவி ஆணையர்- 9895440669 , பொது-7397766651) அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்ட மக்களுக்கு கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமாவிடம் ரூ. 3 லட்சம் மதிப்பிலான உணவுப் பொருட்கள், மருந்து, துணி வகைகளை சமூ அமைப்புகள் ஒப்படைத்தனர்.