இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரியும் வகையில், தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது தவறு. இந்த நடவடிக்கையால், அந்தப் பெண் தீவிர மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பார். இதற்காக, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, இடைக்கால நிவாரணமாக 25 லட்சம் ரூபாயை, தமிழக அரசு வழங்க வேண்டும்.
மேலும், பலாத்காரம் தொடர்பாக, வெறும் நான்கு வீடியோக்கள் மட்டுமே வெளியாகியுள்ளதாகவும், இதில் அரசியல் தொடர்பு இல்லை என்றும் உடனடியாக விசாரணை நடத்தாமல் அறிவித்ததோடு, பாதிக்கப்பட்ட பெண் தொடர்பாக, அடையாளங்களை வெளியிட்ட, கோவை மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.