இவ்வழக்கில் போலீஸார் வசந்தகுமார், செந்தில், சதீஷ், திருநாவுக்கரசர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நாலவர் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது. மேலும், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
போலீஸார் நடத்திய விசாரணையில், பேஸ்புக் மூலம் மாணவிகள், இளம் பெண்களிடம் நட்பை ஏற்படுத்தி ஆனைமலை சின்னப்பம்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசின் பண்ணை வீட்டுக்கு தனியாக வரவழைத்து, ஆபாசமாக படம் எடுத்து, அதைக்காட்டி மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர், பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
மேலும், திருநாவுக்கரசு தலைமறைவாக இருந்தபோதும், இந்த தோழிதான் அவனுக்கு அடைக்கலம் கொடுத்தாக தெரிகிறது. இதனால், திருநாவுகசரின் தோழியை பிடித்தால் இந்த வழக்கில் மேலும் பல உண்மைகள் வெளிவரும் என்ற நோக்கத்தில், போலீஸார் அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.