கோடம்பாக்கம் மேம்பாலத்தில் நள்ளிரவில் நடந்த விபத்து: ஒருவர் பலி

Webdunia
புதன், 19 ஜூலை 2017 (00:55 IST)
சென்னை கோடம்பாக்கம் மேம்பாலத்தில் இன்று நள்ளிரவில் நடந்த விபத்து ஒன்றில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் கோடம்பாக்கம் மேம்பாலத்தில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.



 
 
சற்று முன்னர் கார் ஒன்றை முந்த முயன்ற இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்துவிட்டதாகவும், அவர் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து பலியானதாகவும் முதல்கட்ட போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
மேலும் இதே மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்தவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.
அடுத்த கட்டுரையில்