ஆவின் தயிர் மற்றும் நெய் விலை இன்று முதல் உயர்வு: அமைதி காக்கும் திமுக கூட்டணி கட்சிகள்

வெள்ளி, 22 ஜூலை 2022 (09:40 IST)
ஆவின் தயிர் மற்றும் நெய் உள்பட ஒரு சில பொருட்களின் விலை இன்று முதல் உயர்வு என அறிவிக்கப்பட்டுள்ளர்கூ அடுத்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
500 கிராம் ரூ 35 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல் 500 கிராம் நெய் 290 ரூபாய்க்கு விற்பனையாகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தயிர் மற்றும் நெய் விலை உயர்த்தப்பட்ட அறிவிப்பு பொதுமக்களுக்கு அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில் விலை உயர்வு இன்று முதல் அமல் எனவும் ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது
 
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் எந்த பொருள் விலை உயர்ந்தாலும் உடனடியாக போராட்டத்தை அறிவிக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தற்போது இந்த விலை உயர்வை பார்த்து அமைதியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆனால் அதே நேரத்தில் பேக்கிங் செய்யப்பட்ட தயிர், நெய் ஆகிய பொருட்களுக்கு ஐந்து சதவீதம் மத்திய அரசு ஜிஎஸ்டி வரி உயர்த்தி உள்ளதால் பாஜக மற்றும் அதிமுகவும் அமைதியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்