தயிர் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன...?

திங்கள், 18 ஜூலை 2022 (11:36 IST)
தயிர் புரோபயாடிக் நுண்ணுயிரிகள் இருப்பதால் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது வயிறு உப்புசத்தை குறைக்கிறது.


தயிர் சாப்பிடுவது எடை இழப்புக்கு உதவுகிறது. இது ஸ்டீராய்டு ஹார்மோன்கள் அல்லது கார்டிசோலின் வளர்ச்சியைத் குறைப்பதன் மூலம் உடல் பருமன் ஏற்படும் வாய்ப்புகளை கட்டுப்படுத்துகிறது.

தயிரில் உள்ள மெக்னீசியம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. தயிரில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள், நல்ல கொழுப்புகள் மற்றும் புரோபயாடிக்குகள் மன அழுத்தத்தை சமாளிப்பதில் அல்லது குறைப்பதில் உதவுகிறது.

தயிரில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளதால் தினமும் உணவில் சேர்த்து கொள்வது பற்களை பலப்படுத்து கிறது. எலும்புகளை வலிமையாக்கி கீல்வாதத்தைத் தடுக்க உதவுகிறது.

தினமும் உணவில் தயிரை சேர்த்துக்கொள்வது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. மேலும் இரத்த அழுத்தத்தையும் பராமரிப்பதால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

தயிரில் உள்ள சத்துக்கள் மற்றும் எளிதில் ஜீரணிக்கக்கூடிய புரதம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. கிரேக்க தயிர் இதய நோய் அபாயத்தைக் குறைப்பதாகவும், நீரிழிவு நோயாளிகளின் இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாகவும் சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்