தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று நடைபெற இருக்கும் நிலையில், இந்த மாநாட்டு திடலை முழுமையாக பாதுகாப்பு குழுவினர் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பதாகவும், எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் மாநாட்டை நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டின் பாதுகாப்பிற்காக, துபாயைச் சேர்ந்த GENTUR என்ற நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவும், இந்நிறுவனம் உலகம் முழுவதும் பல முன்னணி பிரபலங்களுக்கு பாதுகாப்பு அளித்து வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக ஹாலிவுட்டில் டாம் குரூஸ், பாலிவுட்டில் சல்மான் கான், ஷாருக்கான், மற்றும் கிரிக்கெட் வீரர்கள் சச்சின், கபில் தேவ் உள்ளிட்டவர்களுக்கு இந்நிறுவனம் பாதுகாப்பு அளித்து வருவதாகவும், அதுமட்டுமின்றி உலகம் முழுவதும் நடைபெறும் பல முக்கிய நிகழ்ச்சிகளுக்கும் இந்நிறுவனம் பாதுகாப்பு வழங்கி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிறுவனம் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டிற்கும் பாதுகாப்பு அளித்து வருவதாகவும், குறிப்பாக விஜய்க்கு இரண்டு அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில், ஒரு புதிய அரசியல் கட்சியின் நிகழ்ச்சியாக இல்லாமல், ஏற்கனவே பல ஆண்டுகளாக அனுபவம் வாய்ந்த ஒரு அரசியல் கட்சியின் மாநாடு போலவே இம்மாநாடு இருப்பதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.