இரண்டு நிமிடம் போதும்.. ஆதார் எண்ணை இணைக்க! – மின்சாரவாரியம் செய்த மாற்றம்!

திங்கள், 5 டிசம்பர் 2022 (09:31 IST)
மின் கணக்கீட்டு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் இணையத்தில் இணைக்கும் முறையை மின்சார வாரியம் மேலும் எளிமைப்படுத்தியுள்ளது.

மின்கணக்கீட்டு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என அமைச்சர் செந்தில் பாலாஜி சமீபத்தில் அறிவித்தார். அதை தொடர்ந்து மின் கணக்கீட்டு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்காக அனைத்து மின்வாரிய அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 6 லட்சத்திற்கும் அதிகமான மின் கணக்குகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஆன்லைனில் மின் கணக்கீட்டு எண்ணுடன் ஆதாரை இணைக்கும்போது ஆதார் நகலை அப்லோடு செய்வது அவசியமாக இருந்தது. இதனால் ஆதார் இணைக்கும் பணி தாமதம் ஆவதுடன், இணைய வேகம் பத்தாமல் பைலை அப்லோடு செய்வதில் பிரச்சினைகள் எழுவதாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில் தற்போது ஆதார் நகல் அப்லோடு செய்ய தேவையில்லை என மின்வாரியம் அறிவித்துள்ளது. அதற்கான வசதி இணையத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

மின்கணக்கீட்டு எண், உரிமையாளர் விவரங்களை பூர்த்தி செய்து இறுதியாக ஆதார் எண்ணை பதிவேற்றினால் ஆதாரில் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு ஓடிபி வரும் அதை ரெஜிஸ்டர் செய்தாலே இணைக்கும் பணி முடிந்துவிடும் என எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

Edit By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்