கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில், இந்த கட்சியில் வேறு கட்சியிலிருந்து எந்த பிரபலங்களும் இதுவரை இணையவில்லை.
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா, அந்த கட்சியில் இருந்து விலகிய நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி, அவருடைய "வாய்ஸ் ஆப் காமன்" என்ற நிறுவனம்தான் தேர்தல் ஆலோசகராக தமிழக வெற்றி கழகத்தில் இருக்கப்போவதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், நேற்று விஜய் - ஆதவ் அர்ஜுனா சந்திப்பு நடந்ததாகவும், இந்த சந்திப்பின்போது சில முக்கிய ஆலோசனைகள் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஆதவ் அர்ஜுனாவுக்கு தமிழக வெற்றி கழகத்தில் மாநில அளவில் ஒரு பதவி வழங்க இருப்பதாகவும், குறிப்பாக இணை அல்லது துணை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.