தனி அறை எடுத்து இளம்பெண்ணுடன் உல்லாசம்: வாலிபருக்கு நேர்ந்த கோர சம்பவம்!!

Webdunia
செவ்வாய், 26 மார்ச் 2019 (14:18 IST)
சென்னையில் காதல் மோகத்தால் வாலிபர் ஒருவர் மர்மான முறையில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை சித்தாலப்பாக்கம் பகுதியில் வசித்து வந்தவர் கார்த்திக்(27). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர் ராஜேஸ்வரி(24) என்ற பெண்ணை காதலித்து வந்தார். 
 
இருவரும் அவ்வப்போது உல்லாசமாக இருக்க கார்த்திக் காதலி ராஜேஸ்வரிக்கு வாடகைக்கு தனியாக வீடு எடுத்து கொடுத்துள்ளார். அவ்வப்போது காதலி வீட்டிற்கு சென்று தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர்.
 
இந்நிலையில் ஊர் சென்றுவிட்டு தனது அறைக்கு திரும்பிய ராஜேஸ்வரி, அங்கு தனது காதலன் கார்த்திக் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். 
 
இதுகுறித்து ராஜேஸ்வரி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜேஸ்வரி மீது சந்தேகித்த போலீஸார் அவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்