கோபத்தின் உச்சத்தில் இருந்த பார்த்திபன், தூங்கிக்கொண்டிருந்த கொடியரசியின் கழுத்தை அறுத்தார். கொடியரசி உயிருக்கு போராடுவதை பார்த்த பார்த்திபன் தாமும் தற்கொலைக்கு முயற்சித்தார். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் இவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.