அவரது அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக காவல்துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் அளித்தனர். மீட்புப்படையினர் படகுடன் வந்து தாயையும் குழந்தையையும் காப்பாற்றிவிட்டனர். ஆனால் பரிதாபமாக ஆட்டோ டிரைவர் பவன்ஷாவை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. தற்கொலைக்கு முயன்ற பெண்ணிடம் செய்த விசாரணையில் அவர் தனது கணவருடன் சண்டை போட்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிய வந்தது.