மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: வானிலை மையத்தின் எச்சரிக்கை எந்த பகுதிக்கு?

ஞாயிறு, 20 டிசம்பர் 2020 (13:30 IST)
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அடுத்தடுத்து இரண்டு புயல்கள் வந்ததன் காரணமாக பெய்த கனமழையால் கிட்டத்தட்ட அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானிலை மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அறிவித்துள்ளது
 
மேலும் குமரி மற்றும் மாலத்தீவு பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை, ஆலங்குடி, தஞ்சை மாவட்டத்தின் ஈச்சன்விடுதி, மதுக்கூர், நெல்லை மாவட்டம், பாபநாசம் ஆகிய பகுதிகளில் ஒரு செமீ மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்