விடாது வரும் மழை... இன்னும் 24 மணி நேரத்தில்...!!

வெள்ளி, 18 டிசம்பர் 2020 (14:29 IST)
அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழை என வானிலை ஆய்வு மையம் தகவல். 
 
வடகிழக்கு பருவமழை மீண்டும் தொடங்கி தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்