டார்ச்சர் செய்து ஆசிரியரை காலி செய்த கல்லூரி நிர்வாகம்

வெள்ளி, 16 நவம்பர் 2018 (15:20 IST)
சென்னையில் கல்லூரி நிர்வாகம் ஒன்று ஆசிரியரின் சான்றிதழ்களை வாங்கிக் கொண்டு திரும்ப தராததால் மனமுடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலூரை சேர்ந்த வசந்த வாணன் என்பவர் சென்னை செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வந்தார்.
 
இந்நிலையில் சமீபத்தில் இவருக்கு வேறு கல்லூரியில் வேலை கிடைத்ததால், கல்லூரி நிர்வாகத்திடம் தனது சான்றிதழை  திருப்பி அளிக்குமாறு கேட்டுள்ளார்.
 
அவரை டார்ச்சர் செய்ய நினைத்த கல்லூரி நிர்வாகம் வசந்தவாணனை பல மாதங்கள் இழுத்தடித்துள்ளது. ஒரு கட்டத்தில் 3 லட்சம் பணம் கொடுத்துவிட்டு சான்றிதழை வாங்கிச் செல்லும்படி கூறியுள்ளனர். இவர்கள் செய்த தாமதத்தால், வசந்தவானனுக்கு கிடைத்த அந்த வேலையும் பறிபோனது. 
 
இதனால் மிகுந்த மனவேதனையடைந்த வசந்தவாணன் ‘நான் செத்த பிறகு எனது சடலத்திடமாகவது எனது சான்றிதழை ஒப்படையுங்கள்’ என்று கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 
 
இவரது தற்கொலைக்கும் தங்களுக்கு எந்த சம்மந்தமும் இல்லை என அந்த கல்லூரி நிர்வாகம் மெத்தனமாக பதிலளித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்