முக ஸ்டாலினுக்கு எதிராக திடீரென களமிறங்கிய நாடார் சமூகத்தினர்: பரபரப்பு தகவல்

Webdunia
புதன், 4 மார்ச் 2020 (11:04 IST)
முக ஸ்டாலினுக்கு எதிராக திடீரென களமிறங்கிய நாடார் சமூகத்தினர்
ராஜ்யசபா தேர்தல் வரும் 26-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் சமீபத்தில் திமுகவின் மூன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.  திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ் மற்றும் என்.ஆர்.இளங்கோ ஆகிய வேட்பாளர்களை திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்ததை அடுத்து நாடார் சமூகத்தினர் இந்த அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்
 
மூன்று தொகுதிகளில் நாடார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட வேட்பாளராக வழங்கப்படாதது கண்டிக்கத்தக்கது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி முக ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவிப்பதாக போஸ்டர் அடித்து சென்னையின் முக்கிய இடங்களில் ஒட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நாடார் சமூகத்தினர் போலவே திமுகவுக்கு முழு ஆதரவு கொடுத்து வரும் இஸ்லாமியர்களும் தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என திமுக மீது குற்றம்சாட்டி உள்ளனர். ஒரே நேரத்தில் திமுக மீது இஸ்லாமியர்கள் மற்றும் நாடார் சமூகத்தினர் அதிருப்தியை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
இந்த நிலையில்  மூன்று தொகுதிகளை வைத்துக்கொண்டு அனைத்து சமூகத்தினரையும் திருப்திபடுத்த முடியாது என்று திமுக தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்