இங்குள்ள சித்தூர் என்ற மாவட்டத்தில் மதனப்பள்ளி என்ற பகுதிக்கு அருகிலுள்ள வலசப்பள்ளி ஊர் எல்லையில் எல்லம்மா என்ற கோவில் உள்ளது. இங்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பக்தர்கள், ஆடு, கோழி, ஆகியவற்றைக் கொண்டு வந்தனர்.
பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த ஆடு கோழிகளை நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி தொடங்கியதும் பலி கொடுத்தனர்,. அப்போது, ஒரு சுரேஷ் என்ற இளைஞர் ஆடு ஒன்றைப் பிடித்தபடி நின்றிருந்தார்.
ஆடுகளைப் பலியிடும் நபரோ அதிக போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது, இதில், ஆடு என்று நினைத்து இளைஞர் சுரேஷின் தலையை வெட்டியுள்ளார்.