தெலுங்கானாவில் மலைப்பாதையில் கவிழ்ந்த பேருந்து : 30 பேர் பலி

செவ்வாய், 11 செப்டம்பர் 2018 (13:52 IST)
தெலுங்கானாவில் மலைப்பகுதியில் ஒரு பேருந்து கவிழ்ந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் 30 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
தெலுங்கானா அருகே உள்ள கொண்டகாட்டு என்ற மலைப்பகுதில் இன்று காலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குறுகலான பாதையில் சாலையில் விளம்பில் பேருந்து சென்ற போது  மலைப்பாதையில் கவிழ்ந்து விழுந்தது. இதில், 30 பேர் பலியாகிவிட்டனர். 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
 
உடனடியாக தீயணைப்பு படையினரும், போலீசாரும் அங்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பலர் படுகாயமடைந்த பலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்