திருமணமான ஒரே மாதத்தில் புதுமண தம்பதிக்கு நேர்ந்த சோகம்!

Webdunia
ஞாயிறு, 24 ஜூன் 2018 (10:10 IST)
சென்னையில் புதுமணத் தம்பதியினர்  மூன்றாவது மாடியிலிருந்து பேசிக்கொண்டிருந்த போது கீழே விழுந்து படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தரமணி தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வசித்து வரும் சங்கலிங்கம் என்பவருக்கும் சுப்புலட்சுமி என்ற பெண்ணிற்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சந்தோஷமாக இவர்களின் இல்லற வாழ்க்கையில் திடீரென அந்த சம்பவம் நடைபெற்றது.
 
நேற்றிரவு கணவனும் மனைவியும் மூன்றாவது மாடியில் பால்கனியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது சங்கலிங்கம் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். கணவனைக் காப்பாற்ற சுப்புலட்சிமி சங்கலிங்கத்தின் கையைப் பிடித்தார். ஆனால் இருவருமே மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்தனர். 
 
சத்தம்கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சங்கலிங்கத்தையும் சுப்புலட்சுமியையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருமணமான ஒரே மாதத்தில் கணவனும் மனைவியும் மாடியிலிருந்து கீழே விழுந்த சம்பவம் தரமணி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்