களத்தில் இறங்கிய அமைச்சர்: கழிவுநீரை சுத்தம் செய்து அசத்தல்

புதன், 21 நவம்பர் 2018 (08:04 IST)
காரைக்காலில் அமைச்சர் கமலக்கண்ணன் சாலையில் ஏற்பட்ட கழிவுநீர் அடைப்பை சீர் செய்தது பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளது.
கஜா புயலானது டெல்டா வட்டங்களை புரட்டிப் போட்டுள்ளது. பலர் தங்களை உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். காரைக்கால் மாவட்டத்தில் கஜா புயலால் ஏராளமான மரங்கள் சாய்ந்து சாலைகளில் விழுந்தன. கழிவுநீர் செல்லும் பாதையில் மரம் விழுந்துகிடந்ததால் கழிவுநீர் செல்ல முடியாமல் சாலைகளில் தேங்கிக் கொண்டிருந்தது.
இந்நிலையில் நேற்று புதுவை கல்வித்துறை அமைச்சர் கமலகண்ணன் அந்த வழியாக காரில் வந்து கொண்டிருந்தார். சாலைகளில் கழிவுநீர் தேங்கி நிற்பதை பார்த்த அவர் உடனடியாக காரிலிருந்து இறங்கி அங்கிருந்த மரங்களை கட்சியினருடன் அகற்றினார். பின்னர் சாலைகளில் இருந்த கழிவுநீரானது சற்று நேரத்தில் வடிந்தது.
 
அமைச்சர் கமலகண்ணணின் இந்த செயலை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்