பினராயி விஜயன் போல் நீங்கள் செயல்பட்டீர்களா? ஈபிஎஸ்க்கு பாமக ராம்தாஸ் எதிர்க்கேள்வி

செவ்வாய், 20 நவம்பர் 2018 (19:12 IST)
கேரள வெள்ளத்தின்போது அம்மாநில முதல்வருக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு கொடுத்தது போல் தமிழக எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்கவில்லை என இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ், 'நீங்கள் பினராயி விஜயன்' போல் செயல்பட்டீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று புயல் பாதித்த டெல்டா பகுதிகளை பார்வையிட்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'புயல் நிவாரணப் பணிகளுக்கு  கேரளத்தை போல எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. மேலும் புயல் நிவாரணப்பணிகளை எதிர்கட்சிகள் கொச்சைப்படுத்தக்கூடாது என்றும் இதனை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்றும் அவர் எதிர்க்கட்சிகளை கேட்டுக்கொண்டார்.

முதல்வரின் இந்த கருத்துக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டரில், 'கேரள முதலமைச்சர் 100 மணி நேரம் கழித்து தான் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றாரா? கேரள முதல்வரைப் போன்று நிவாரணப் பணிகள் குறித்து எதிர்க்கட்சிகளுடன் எடப்பாடி பேசினாரா? ஆலோசனைகளைப் பெற்றாரா?

கேரளத்தில் பினராயி விஜயன் அரசு வெள்ள நிவாரணப் பணிகளை செய்தது போல தமிழகத்தில் கஜா புயல் நிவாரணப் பணிகளை எடப்பாடி அரசு செய்ததா? கஜா புயலால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை 100 மணி நேரம் கழித்து முதலமைச்சர் பழனிச்சாமி பார்வையிடுகிறார் என்று கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்