ஓவர் டார்ச்சர் செய்த மனைவி.. துப்பாக்கியால் சுட்ட கணவன்

Webdunia
வெள்ளி, 31 மே 2019 (15:49 IST)
தொடர்ந்து மனைவி திட்டிக்கொண்டே இருந்ததால் கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கல்வராயன்மலை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கல்வராயன்மலை பகுதியில் உள்ள கொடமத்தி பகுதியை சேர்ந்தவர் ரவி. இவருக்கு பிரியா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கூலி வேலை செய்பவரான ரவி சில சமயம் வெளியூர் வேலைகளுக்கும் செல்வார். சில நாட்கள் தங்கி பணிபுரிய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் தங்கி விடுவார். இந்நிலையில் அவர் மனைவி பிரியா அவரை சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டை போட்டும், திட்டியும் வந்துள்ளார். சமாதானம் செய்த ரவி, தனது மனைவியின் கோரிக்கைக்கு இணங்கி பாச்சேரியில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்று குடியேறினார்.

எந்தவித பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்துவந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு பிரியா கணவரின் நடத்தையில் சந்தேகப்பட்டு மறுபடி சண்டை போட ஆரம்பித்துள்ளார். மனைவியின் தொடர்ந்த சண்டைகளையும், திட்டல்களையும் பொருத்துக்கொள்ள முடியாமல் வீட்டில் இருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து தன்னை தானே சுட்டுக்கொண்டு செத்துவிட்டார் ரவி.

இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்