வங்கக் கடலில் மீண்டும் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு! எச்சரிக்கை அறிவிப்பு!

Mahendran
செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (10:27 IST)
வங்க கடலில் கடந்த சில நாட்கள் முன்பு தான் காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டு ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே கரையை கடந்த நிலையில் தற்போது மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடமேற்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய அரபிக் கடலில் உள்ளது. இது படிப்படியாக நகர்ந்து வலுவிழந்து அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் செப்டம்பர் 5ஆம் தேதி மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பின்னர் தான் இது தாழ்வு மண்டலமாக உருவாகி புயலாக மாறுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்