பின்னாளில் காங்கிரஸில் இருந்து பிரிந்து 'பார்வர்ட் ப்ளாக்' என்ற இயக்கத்தையும், 'இந்தியத் தேசிய இராணுவம்' என்ற படையையும் கட்டமைத்தாலும் ஒன்றுபட்ட தேச விடுதலை, தேச தலைவர்கள் மீது என்றும் மதிப்பு வைத்திருந்தார். அதனாலேயே, தனது இராணுவப் படைப் பிரிவுகளுக்கு காந்தியார், நேரு, மௌலானா ஆசாத், ஜான்சி இராணி இலட்சுமிபாய் (மகளிர் படை) ஆகியோர் பெயரை வைத்தார்.