மனைவி மேல் ஆசை கொண்ட நண்பன்; தட்டிக்கேட்ட கணவன் கொலை! – கரூரில் அதிர்ச்சி!

ஞாயிறு, 12 மார்ச் 2023 (13:09 IST)
கரூரில் மனைவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நண்பனை தட்டிக்கேட்க சென்ற கணவரை சக நண்பர்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி. இவரது நண்பர்கள் தில் ரெங்கநாதபுரத்தை சேர்ந்த நவாஸ் மற்றும் பழைய ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த கருப்புசாமி. நண்பர்கள் இருவரும் அடிக்கடி தனது நண்பரான ராஜீவ் காந்தி வீட்டிற்கு சென்று வந்த நிலையில் அவரது மனைவியும் பேசி பழகியுள்ளதாக தெரிகிறது. இதில் ராஜீவ் காந்தியின் மனைவி மீது நவாஸ் ஆசைக்கொண்ட நிலையில் தனது ஆசைக்கு இணங்குமாறு அடிக்கடி ராஜீவ் காந்தி மனைவிக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதுகுறித்து ராஜீவ்காந்திக்கு தெரிய வரவே கடந்த 9ம் தேதியன்று பஞ்சபட்டி டாஸ்மாக்கிற்கு நண்பர்களை அழைத்த ராஜீவ் காந்தி, நவாஸிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் சண்டை முற்றவே நவாஸும், கருப்பசாமியும் சேர்ந்து ராஜீவ்காந்தியை அடித்துக் கொலை செய்துள்ளனர். இதுகுறித்து ராஜீவ் காந்தி மனைவி அளித்த வாக்குமூலத்தின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் நவாஸ் மற்றும் கருப்பசாமியை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்