“அத என்கிட்ட கேக்காதீங்க… விஜய்கிட்டயே கேளுங்க” –எஸ் ஏ சி கடுப்பு

செவ்வாய், 7 மார்ச் 2023 (08:16 IST)
இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் தனது மகன் விஜய் பெயரில் கட்சி ஒன்றை தொடங்கினார். ஆனால் அந்த கட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறிய விஜய் தனது ரசிகர்கள் அந்த கட்சியில் இணைய வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்தது. இதற்கு அவரது மனையும் விஜய்யின் அம்மா ஷோபாவுக்கு விரும்பமின்றி அக்கட்சியிலிருந்து விலகி விஜய்க்கு ஆதவளித்தார். இதனால் விஜய் குடும்பத்தில் அவரது பெற்றோர்களுக்கும் அவருக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை. இந்நிலையில் சமீபத்தில் காஞ்சிபுரம் கோயிலில் வழிபாடு செய்த விஜய்யின் தாயார் ஷோபாவிடம் விஜய்யின் வாரிசு படம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

இந்நிலையில் திருவண்ணாமலை அருகே உள்ள கோயிலுக்கு தரிசனத்துக்காக வந்தார். அப்போது பத்திரிக்கையாளர்கள் விஜய்யின் அரசியல் வருகை பற்றி கேட்டபோது “அதைப் பற்றி அவரிடம்தான் கேக்க வேண்டும்” என சொல்லிவிட்டு சென்றுள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்