ஆதார் மையத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி நூதன முறையில் மோசடி

வியாழன், 11 ஜனவரி 2018 (12:38 IST)
மத்திய அரசின் ஆதார் மையத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடம் மோசடி செய்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
நாட்டில் பல்வேறு பகுதியில் வேலை வாங்கித் தருவதாக கூறி, மக்கள் பலரை ஏமாற்றும் கும்பல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் தொடர்ச்சியாக உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள அலங்கிரி கிராமத்தைச் சேர்ந்த தமிழ்செல்வன்(23) என்பவன் ஆதார் மையத்தில் வேலை செய்ய விரும்புவர்கள் தன்னை தொடர்பு கொல்லுமாறு கூறி தனது மொபைல் எண்ணை வாட்ஸ் ஆப் மற்றும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளான்.
 
இவனது பதிவை வலைதளங்களில் பார்த்த இளைஞர்கள் பலர் தமிழ்செல்வனை தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களிடம் வேலைக்கான அழைப்புக் கடிதம் அனுப்ப 10000 செலவாகும் என கோரியுள்ளான். இதனை நம்பி ஏராளமான இளைஞர்கள் தமிழ்செல்வனின் வங்கிக் கணக்கில் 10000 ரூபாயையை செலுத்தியுள்ளனர்.

பல நாட்கள் கடந்தும் தமிழ்செல்வன் கூறிய படி வேலை வாங்கித் தராததால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழக முதல்வருக்கும், தமிழக காவல் துறை தலமைக்கும் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீஸார் தமிழ்செல்வனை பிடித்து விசாரித்ததில், அவன் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து போலீஸார் மோசடியில் ஈடுபட்ட தமிழ்செல்வனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்