ஷேர் மார்க்கெட்டால் வந்த வினை: சென்னை குடும்பத்தாரின் அதிர்ச்சி முடிவு....

Webdunia
திங்கள், 5 நவம்பர் 2018 (07:43 IST)
சென்னையில் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து பணத்தை இழந்த நபர் தன் தாயுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை கொரட்டூரை சேர்ந்தவர் அமலா(60). இவரது மகன் ஜோஷ்வா(29). அமலா அப்பகுதியில் சீட்டு நடத்தி வந்தார். இவரிடம் 300க்கும் மேற்பட்டோர் சீட்டுப்பணம் கட்டி வந்தனர்.
 
சீட்டுப்பணத்தை ஜோஷ்வா பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக்கிறார். ஆனால் போட்ட மொத்த பணமும் நஷ்டமடைந்துள்ளது.
ஆகவே இனியும் உயிரோடு இருந்தால் பணம் கொடுத்தவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் என அஞ்சி தாய் மகன் இருவருமே தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்