''அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவேன்''-சூப்பர் ஸ்டார் சுதீப்புக்கு மிரட்டல் கடிதம்...

புதன், 5 ஏப்ரல் 2023 (19:15 IST)
கன்னட சினிமாவின் பிரபல  நடிகர் சுதீப். இவர் உபேந்திராவுடன் இணைந்து நடித்துள்ள கப்சா திரைபடம், விக்ராந்த் ரோனா, ஆகிய படங்கள்  சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில், கர்நாடகத்தில் வரும் மே மாதம்  சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், அவர் பாஜகவில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியானதது.

இன்று  பெங்களூர் விமான  நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சுதீப், சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்றும்,பாஜகவுக்கு மட்டும் தேர்தல் பிரச்சாரம் செய்யவுள்ளதாகக் கூறினார்.

இந்த நிலையில்,நடிகர் சுதீப்பிற்கு இன்று ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதில், சுதீப்பின் அந்தரங்க வீடியோவை வெளியிடுவேன் என்று அன்டஹ்க் கடிதத்தில் மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து போலீஸில் புகாரளிக்கப்பட்ட நிலையில், அந்த மர்ம நபர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து, நடிகர் சுதீப், இந்த மிரட்டல் கடிதம் அனுப்பியது யார் என்று தெரியும். நான் இதற்கு அவர்களுக்கு சரியான பதிலடி தருவேன் என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்