ஈஷாவில் வண்ணமயமாக நடந்த ராஜஸ்தானிய நாட்டுப்புற நிகழ்ச்சி!

திங்கள், 23 அக்டோபர் 2023 (10:45 IST)
ஈஷா நவராத்திரி விழாவின் 7-ம் நாளான இன்று (அக்.21) சிவநாரயணன் குழுவினரின் ராஜஸ்தானிய நாட்டுப்புற நடன நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.


 
கோவை ஈஷா யோக மையத்தில் நவராத்திரி விழா கடந்த 15-ம் தேதி முதல் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களும் நம் பாரத பண்பாட்டையும், தமிழ் கிராமிய கலைகளையும் அறிந்து கொள்ளும் விதமாக தினமும் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நவராத்திரி கொண்டாட்டத்தின் 7-ம் நாளான இன்று பிரபல ராஜஸ்தானிய நாட்டுப்புறக் கலைஞர் திரு. சிவ நாராயணன் குழுவினரின் சக்ரி மற்றும் கூமர் என்ற பாரம்பரிய நடனம் மற்றும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நடன கலைஞர்கள் வண்ணமயமான ஆடைகளை அணிந்து  துள்ளல் இசையுடன் கூடிய ஒரு நடன விருந்தை படைத்தனர்.  பார்வையாளர்கள் இந்நடனத்தை பார்த்து ரசித்ததோடு மட்டுமின்றி அவர்களும் சேர்ந்து ஆடி ஆனந்தம் அடைந்தனர்.

முன்னதாக, தொண்டாமுத்தூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் திருமதி. கமலம் ரவி வேடப்பட்டி பஞ்சாயத்து தலைவர் திருமதி. ரூபினி, கோவை மாவட்ட விவசாய சங்க தலைவர் திரு சின்னுசாமி உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

ஈஷாவில் நவராத்திரி விழாவையொட்டி இசை நிகழ்ச்சிகள் மட்டுமின்றி பாரம்பரிய ஆடைகள், அணிகலன்கள், ஓவியங்களின் கண்காட்சி மற்றும் விற்பனையும் நடைபெற்று வருகிறது. 8-ம் நாளான நாளை (அக்.22)  இந்தோசோல் குழுவினரின் கர்நாடக இசை நிகழ்ச்சி மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்